Skip to content
Bhumi RTE
  • பெற்றோர்
  • Refer
  • About
    • Tamil
    • English
  • Volunteer
  • Supporters
  • Refer a promotional partner
  • Role of Bhumi
  • About Bhumi
Menu Close

About RTE

  1. Home>
  2. About RTE
Tamil
English
Tamil

 கட்டாய கல்விச் சட்டம் 12.1.C

 

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும்,

இது 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை விவரிக்கிறது. 

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-அ கீழ் இந்தியாவில் 14. ஏப்ரல் 1, 2010 அன்று கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) நடைமுறைக்கு வந்தபோது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றிய 135 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

 

கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது. 

அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் 

 

கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) அரசால் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு பொருந்தாது , மேலும் நன்கொடை மற்றும்  குழந்தை அல்லது பெற்றோர்களுக்கு நேர்காணல் இல்லாமல் சேர்க்கை செய்ய வழிவகுக்கிறது.. 

 

கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) மூலம், தொடக்கக் கல்வி முடிவடையும் வரை எந்தவொரு குழந்தையையும் தடுத்து நிறுத்தவோ, வெளியேற்றவோ அல்லது வாரிய தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற கட்டாயமோ கிடையாது .

 

1.கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) 2009 இன் முக்கிய நோக்கம் என்ன?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் பொருளாதார அல்லது சாதி பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான தொடக்கக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே கல்வி உரிமைச்  சட்டத்தின்(ஆர்.டி.இ) முக்கிய நோக்கமாகும் 

.

 

2.கல்வி உரிமைக்கான முக்கியத்துவம் என்ன?

கல்வி வறுமையை குறைக்கிறது, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிறது, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் ஒவ்வொரு நபரும் தங்கள் முழு திறனை அடைய உதவுகிறது. இது ஒரு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வருவாயைக் கொண்டுவருகிறது மற்றும் நீடித்த அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை அடைய சமூகங்களுக்கு உதவுகிறது. மேலும் அனைத்து  மனித உரிமைகளையும் அடைவதற்கு கல்வி ஒரு முக்கியமான ஆயுதமாகும்.

 

பூமி – கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ)

 

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமை சட்டம்(ஆர்.டி.இ) 2009 இன் படி கல்வி என்பது நாட்டில்  உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாக மாற்றியது, சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியில் உள்ள குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்கிறது. 

 

நாடு முழுவதும் கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் சேர்க்கை இடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது , இதில் 15 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலமாக  1.2 லட்சம் இலவச இடங்கள் கிடைக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவற்றில் 50-60% இடங்கள் மட்டுமே நிரம்புகிறது. இதற்கு முக்கியமான காரணம் மக்களிடையே கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையும், விண்ணப்பங்களை சமர்பிப்பதில் (Offline) மக்களுக்கு எளிமையான அணுகல் முறை இல்லாமையும் காரணமாகும்.

 

மக்களிடம் கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை 

  1. தன்னார்வலர்களை கள பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவது

2.மற்ற தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சியளித்து அவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது  என இந்த 2 முறைகளில் பூமி அமைப்பு செயல்படுத்துகிறது

 

பூமி அமைப்பானது கடந்த கல்வியாண்டு (2019-20) முதல் தமிழக அரசின் கல்வி துறையுடன் (Samagra Shiksha ) இணைந்து கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலம் விண்ணப்பிக்கும் முறையை ஆன்லைன் (Online) ஆக மாற்றியது. இதன்மூலம் பெற்றோர்கள் விண்ணப்பங்களை செலுத்துவதை எளிமையாகியது, மேலும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க தன்னார்வலர்களை கொண்டு  கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வாழ்க்கை மாற்றத்திற்கான நன்மையை பெற உதவுகிறது.

 

கல்வி உரிமை சட்டம் -புள்ளிவிவரம் 

 

கல்வி ஆண்டு

காலி இடங்கள்

சேர்க்கைகள்

நிரப்பு விகிதம்

2018-19

1,27,137

63,309

49%

2019-20

1,24,350

73,504

59%

தமிழ்நாட்டை பொறுத்தவரை, மொத்தமுள்ள 9000 தனியார் பள்ளிகளில் 1.24 லட்சம்  காலி இடங்கள் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இருந்தும் கடந்த கல்வியாண்டிற்கான(2019-20) சேர்க்கயில் வெறும் 59 சதவிகித இடங்கள் மட்டுமே கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு பூமி அமைப்பின் விழிப்புணர்வு பிரச்சார தாக்கம் 

 

பூமி அமைப்பு மக்களிடம் கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்டத்தின் முழு பயனை மக்கள் அடையவேண்டுமென விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஏற்படுத்திய விழிப்புணர்வின் விவரங்கள் கீழே கொடுப்பட்டுள்ளது 

 

தன்னார்வலர்கள் எண்ணிக்கை: 139

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்: 17900

பூமி உதவிமைய எண்ணுக்கு வந்த அழைப்புகள்: 6158

கல்வி உரிமைச்சட்டம் மூலம் இலவச சேர்க்கை : 797 

 

கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) -விண்ணப்பிக்க தகுதியுடையோர் 

 

1.நலிவடைந்த பிரிவு:

 

ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும்  குறைவாக உள்ள அனைத்து  பிரிவினரும்  நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். 

2.பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட குழந்தைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

 

அ). பின்தங்கிய வகுப்பு (BC)

ஆ). மிகவும் பின்தங்கிய வகுப்பு (MBC)

இ). பட்டியல் பழங்குடியினர் (ST)

ஈ). பட்டியல் இனத்தவர்கள்(SC)

 

பின்தங்கிய பிரிவு-சிறப்பு வகை கீழ் விண்ணப்பிக்கப்பட்ட குழந்தைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

1.அனாதை குழந்தைகள்

2.எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள்

3.திருநங்கைகள்

4.துப்புரவு தொழிலாளர்கள் குழந்தை

5.மாற்றுத்திறனாளி குழந்தை

 

முகவரி சான்று:

 

01.04.2013 தேதியிட்ட பள்ளி கல்வித் துறையின் G.O 60 இன் படி. , வசிப்பிடத்தை நிரூபிக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்ற வேண்டும்.

 

1.குடும்ப அட்டை

2.வாக்காளர் அட்டை 

  1. ஆதார் அட்டை 

4.ஓட்டுநர் உரிமம்

  1. வங்கி கணக்கு புத்தகம் 

6.தொலைபேசி பில்

7.பான் அட்டை

8.VAO வழங்கிய குடியிருப்பு சான்றிதழ்

9.மாநில அரசு / மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை.

 

கல்வி உரிமைச் சட்டத்திற்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?

 

கல்வி உரிமை சட்டம்(ஆர்.டி.இ)  மூலம் 3 முதல் 4 வயதுடைய குழந்தைகள் LKG வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை செயல்முறைகள் அரசால் நடத்தப்படுகிறது 

 

விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை சேர்ந்த குழந்தையாக இருக்க வேண்டும். 

 

அக்கம்பக்கத்தில் ( வீட்டு முகவரியில் இருந்து 1 கிமீ சுற்றளவில்) உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பங்களை செலுத்த முடியும் . 

 

ஒரு குழந்தை குறைந்தது 1 பள்ளி முதல் அதிகபட்சம் 5 பள்ளி வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் .

 

கட்டாய ஆவணங்கள் 

 

கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலம் இலவசக்கல்வியில் குழந்தையை சேர்க்க விண்ணப்பம் செலுத்தும் பொது கீழ்காணும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

அ ). குழந்தையின் பிறப்பு சான்று 

ஆ ). வருமான சான்று 

இ ). சாதி சான்று 

ஈ ). இருப்பிட சான்று 

மேல்குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இல்லையென்றாலும் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குவதற்கு முன்னதாக  விரைவாக விண்ணப்பித்து தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும் 

 

குழந்தைகள் தேர்வு முறை:

கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பித்த குழந்தைகள் தங்களது தேர்வு நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

 

விண்ணப்ப தேதி முடிந்த பிறகு , விண்ணப்பங்கள் அரசால் சரிபார்க்கப்பட்டு, சரியான தகவல்களோடு விண்ணப்பித்த குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ( பின்தங்கி சிறப்பு பிரிவு குழந்தைகள் -குலுக்கல் முறைக்கு முன்பாக விண்ணப்பித்த பள்ளிகளில் சேர்க்கை அளிக்கப்படும் ). 

 

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் எழுதப்படும். பெற்றோர்கள் இதன்  மூலம் தங்கள் குழந்தைக்கு எந்த பள்ளியில் சேர்க்கை கிடைத்துள்ளது என தெரிந்து கொண்டு , குழந்தையை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

 

இலவச கல்வி இணையதள பதிவு 

 

இலவசக்கல்வி (ilavasakalvi.in) பூமி அமைப்பால் தொடங்கப்பட்டுள்ள ஒரு உதவி பதிவு இணைய தளமாகும். கல்வி  உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ)  மூலம் குழந்தையை பள்ளியில் சேர்க்க விரும்புவோர் , இச்சட்டம் பற்றி ஆலோசனை பெறவும், கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ)   மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான உதவிகளை பெறவும் , குழந்தையின் தகவல்களை இந்த இணையத்தளம் மூலமாக பதிவு செய்து பூமி அமைப்பிற்கு தெரியப்படுத்தி பூமி அமைப்பு தன்னார்வலரின் உதவியை பெறலாம். மேலும் பூமி உதவிமைய எண் 8144 22 4444 என்கிற எண்ணிற்கு ஒரு தவறிய அழைப்பு (Missed Call) கொடுத்து எங்களது தன்னார்வலரின் உதவியை பெறலாம்.

 

பெற்றோர் பதிவு

 

கல்வி உரிமை சட்டம் பற்றிய தகவல் அறிந்து , உங்கள் குழந்தையை இலவசக்கல்வியில் சேர்க்க தேவையான உதவிகளை பூமி அமைப்பிடம் இருந்து பெற, குழந்தையின் தகவல்களை பெற்றோர் பதிவில் சென்று பதிந்து எங்கள் பூமி தன்னார்வலர்களின் உதவியை பெறலாம் .

 

தன்னார்வலர் பதிவு 

 

தன்னார்வலர்கள், தங்கள் பகுதியிலோ, தங்கள் வீட்டில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கோ இந்த சட்டம் மூலம் இலவசக்கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி தந்து உதவிட குழந்தைகளின் தகவலை பதிவு செய்து பூமி அமைப்பின் உதவியை பெறலாம் 

 

English

RTE 12 1 C – Introduction:

The Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009 mandates a minimum reservation of 25% seats in entry-level classes (LKG and Grade 1) of private unaided schools for children belonging to Disadvantaged Groups (DG), Weaker Sections (WS) and Disadvantaged Special Groups (DGS). This provision promotes inclusion and diversity in classrooms. Despite efforts from the Central and State governments, 15 lakhs of the 22 lakhs seats available nationally under RTE Section 12(1)(c) go vacant every year.

Why this law?

The intention behind this provision is to ensure all stakeholders share the obligation of guaranteeing free and compulsory education to children. Since the number of unaided private schools is growing rapidly, it is an important stakeholder and should be brought under the ambit of RTE, which is where Section 12(1)(c) comes into the picture.

This Section is also the only provision in the RTE Act which talks about social integration at the school level and attempts to convert educational institutions into inclusive spaces. Such inclusive schools will ensure every child brings something different to the table, hence enriching the school community and creating a more democratic learning environment. 

Impact of Right to Education 12(1)(c): 

Recent studies on the effects of the RTE act suggest benefits for both sets of students. On one hand, fee-paying children studying in heterogeneous classrooms (where there are children from different economic and social backgrounds) are more likely to volunteer for nation-building compared to their friends inhomogeneous classrooms. 

On the other hand, 25% of disadvantaged children have shown significant gains in self-efficacy, which is a belief in one’s ability to succeed. The key findings of the recent study by Vijay Kumar Damera, 2018, Essays on School Choice: Empirical Evidence from Implementation of India’s National School Choice Policy are that the policy has a positive effect on self-efficacy, particularly for girls. In a study conducted for 1.5 years in Karnataka on a sample of 1616 students, it was noted that girls gained more out of RTE 12(1)(c) than boys. 

Studies have also established the fact that diverse classrooms which Section 12(1)(c) strives to bring about, results in the better academic achievement of children and leads to friendships that overlook barriers of caste, class, gender and sexuality, making them more empathetic.

Impact Report: Right to Education Campaign in TN, 2019.

The Right of Children to Free and Compulsory Education Act or Right to Education Act (RTE), describes the modalities of the importance of free and compulsory education for children between 6 and 14 in India, under Article 21a of the Indian Constitution. 

India became one of 135 countries to make education a fundamental right of every child when the Act came into force on 1 April 2010. Section 12(1)(c) of the Right To Education Act guarantees free education for economically weaker and socially backward children in private schools. 

The biggest problems in realising this right are awareness and accessibility, and Bhumi has been working actively on both domains. Mere one-time support to these children can be a life-transforming opportunity for these families and a wonderful chance at developing socially-inclusive societies.

Bhumi – Project Impact Indicators

Volunteers mobilized: 139

Total Pamphlets distributed: 17,900

Total calls to Bhumi RTE helpline: 6,158

Direct Impact: 797 children enrolled through RTE in TN

Bhumi has contributed by creating awareness, setting up help desks and application support through

  • Field campaigns by Bhumi volunteers
  • Campaigns by partner organisations
  • Bhumi RTE Mobile Application

TN RTE statistics:

Fill rate data from the last two years;

Academic Year

Intake Capacity

Admitted

Fill Rate

2018-19

1,27,137

63,309

49%

2019-20

1,24,350

73,504

59%

The increase in fill rate clearly shows that the demand from the public has increased to avail the benefit of this act. To create a transparent system for the public, last year, registration from schools and children has been made available online. 

Also, last year, the Tamil Nadu government had introduced GIS landmarking option in the application section, so that the parents will not face any last-minute problems such as the selected school is not within the eligible distance limit. 

Right to Education Act – Eligibility Criteria

Weaker Section:

For all sections of people with an annual income of less than Rs. 2 lakhs can apply under the Weaker section. To avail this, parents should get Income certificate from respective Tahsildar.

Income Certificate: Tahsildar, Revenue Department – Government of Tamilnadu.

Income certificate of child’s parent applied under weaker section should be confirmed whether it’s issued by an authorized officer.

Disadvantaged Group (DG):

Children applying under the Disadvantaged category, should belong to any one of the below-mentioned sections.

  • Backward Class (BC)
  • Backward Class Muslim
  • Most Backward Class (MBC)
  • Denotified Community (DNC)
  • Scheduled Community (SC)
  • Scheduled Tribes (ST)

If applied under any of the above-mentioned sections, as per G.O 60 of School education department, the applicant should upload a document issued by a respective officer.

Community certificate for BC, BC (Muslim), MBC, Denotified Community: Deputy Tahsildar, Revenue Department – Government of Tamilnadu.

Community Certificate for SC: Tahsildar, Revenue Department -Government of Tamilnadu /Competent authority in the case of children coming from other states.

Community Certificate for ST: RDO/Sub Collector, Revenue Department – Government of Tamilnadu/Competent authority in the case of children coming from other states.

Disadvantaged Special Category (DG-Spl):

Children applying under Disadvantaged Special Category, should belong to any one of the below-mentioned sections.

  • Orphan
  • HIV affected Children
  • Transgender
  • Child of a Scavenger
  • Differently-Abled Child

If applied under any of the above-mentioned sections, as per G.O 60 of School education department, Dated 01.04.2013, a document issued by the respective officer should be uploaded. 

Certificate for Orphan: District Social Welfare Officer, Department of Social Welfare and Nutritious Meal Programme.

Certificate for HIV / Transgender: Medical Officer authorized by the Department of Health and Family Welfare – Government of Tamilnadu.

Children of a Scavenger: Competent Authority authorized by the Commissioners of the respective Corporations, Municipalities, Executive officer of respective Town Panchayats and Presidents of respective Village Panchayat.

Children of Scavenger who are not employed in Corporations, Municipalities, Town and Village Panchayats: District Collector or the authority authorized by the District Collector on this behalf.

Certificate for Differently-Abled Child: District Differently-Abled Rehabilitation Officer.

Address Proof:

As per G.O 60 of School Education Department Dated. 01.04.2013, to prove habitation, the applicant should upload any one of the below-mentioned address proof,

  • Family Card
  • Voter Id
  • Aadhar ID
  • Driving License
  • Bank Pass Book
  • Telephone Bill
  • PAN card
  • Certificate of residence issued by VAO
  • ID card issued by the State Govt./ Central Govt. / Public sector Undertakings

Volunteer Testimonial:

Volunteer Veda shares her experience working with Bhumi on RTE:

Being a volunteer has always been an exciting role. We come across challenges, gain different experiences and not to miss, meeting and getting to know more like-minded people is the most amazing aspect about volunteering.

I would call it a lucky coincidence that I read about the Right to Education (RTE) orientation and reached out to Bhumi for it. I have been working as a calling volunteer (handling calls received through the RTE helpline) since then. From my first day of orientation until today, discussions with the team have always been organic and non-judgmental, which I believe are the key elements to function as ONE TEAM.

I was not aware of what RTE is apart from its abbreviation. Hence, the orientation truly gave me a new perspective towards education and how RTE can make a difference in ensuring equal access to quality education. I believe ‘Awareness building’ is the sole purpose of volunteering for RTE. So, the role of a calling volunteer made me feel proud and responsible for carrying out this process over calls.

Among these numerous conversations, one parent’s call who would be all ears to know every little detail of schooling which can be availed through RTE for his or her kid has always lightened up my day. Many a time, people who may not directly benefit from RTE would call up to enquire on the details to pass it onto their known ones. They are indeed inspirational!

The best part is the personal messages I receive from parents who get acquainted over time, sharing the good news of their children’s admission. Every such message fills me up with joy.

The RTE volunteers team is a dynamic one, balancing their priorities and volunteering. Even during times of crisis like lockdown, they are constantly brainstorming and carrying out actions to make sure the process of awareness building is not hindered. This clearly shows the spirit the team holds. Kudos to everyone who have been a part and are still a part of the team, and are making a difference through RTE. I am very glad that I was able to be associated and contribute to the cause. Even though I wasn’t able to take part in field campaigning, I do look forward to getting involved in the coming days.

-Veda

If you have or know children between the age of 3 and 4 who can benefit from free education through RTE, please provide their details through the form on this website. If you need more information, call 81442 24444 – A Bhumi volunteer will guide you through the application process. 



Bhumi, one of India's largest volunteer non-profit organisations, provides comprehensive educational support for over 25,000 underprivileged children across India to become better citizens of tomorrow. Bhumi as a platform enables over 20,000 volunteers in more than 12 cities across India to contribute for causes like education, environment, animals and community welfare.
Website developed by Bhumi - Tech4Change
  • பெற்றோர்
  • Refer
  • About
    • Tamil
    • English
  • Volunteer
  • About Bhumi
  • Supporters
  • Refer a promotional partner
  • Role of Bhumi